பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் முக்கிய நபர் கர்ப்பம்.. யார் தெரியுமா
Kathick
in தொலைக்காட்சிReport this article
சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியல்களில் ஒன்று.
இதில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தங்களது சொந்த வீட்டை இழந்து வேறொரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்கள். அதே போல், மிகப்பெரிய டிப்பாட்மெண்டல் கடையாக இருந்தது தற்போது பழையபடி மளிகை கடையாக மாறிவிட்டது.
இந்த இரண்டு விஷயத்திற்கும் பின்னணியில் மீனாவின் தந்தை இருந்து செயல்பட்டு வருகிறார். மேலும், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஹோட்டலையும் மூடவைக்க வேறொரு நபர் திட்டம்தீட்டி அதை செய்தும் முடித்துள்ளார்.
ஆம், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டலை அரசாங்க அதிகாரிகள் வந்து, கடைக்கு சீல் வைத்துவிட்டனர். ஆனால் எதார்க்காக வைத்துள்ளார்கள் என்பதை நாளை ஒளிபரப்பாகவிருக்கும் எபிசோடை பார்த்தால் தெரியும்.
கர்ப்பமான முல்லை
திருமணம் ஆனதில் இருந்து குழந்தைக்காக ஏங்கி கொண்டிருந்த நபர் முல்லை. ஆம், கதிர் - முல்லை ஜோடியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என ஏற்கனவே மருத்துவர் தெரிவித்திருந்தார். அதற்காக மருத்தவ ரீதியான சிகிச்சை செய்தபின்பும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், தற்போது முல்லை கர்ப்பமாகிவிட்டார் எனும் நல்ல செய்தி வெளியாகியுள்ளது. இதுவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த ட்விஸ்ட் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
சரத்குமார் - ராதிகாவின் மகனா இது.. எப்படி இருகிறார் பாருங்க