திருமணத்தில் அசிங்கப்பட போகும் ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் அடுத்த பிரச்சனை!
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது அண்ணன் தம்பிகள் பிரிவதற்கான அறிகுறிகள் தான் சமீபத்திய எபிசோடுகளில் வந்து கொண்டிருக்கிறது. கதிர் ஹோட்டல் நடத்தி சம்பாதிக்கிறார், கண்ணன் அரசு வேலையில் சம்பாதிக்கிறார்.
ஆனால் மளிகை கடையில் அண்னன் மூர்த்தி உடன் வேலை பார்க்கும் ஜீவா மட்டும் கையில் எந்த காசும் இல்லாமல் இருக்கிறார். இது அவருக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி வீட்டில் பல சண்டைகள் வர காரணமாகி இருக்கிறது.
மொய் வைப்பதில் வரும் அடுத்த பிரச்சனை
மீனாவின் தங்கைக்கு திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அதற்கு எவ்வளவு மொய் வைக்கலாம் என மூர்த்தி யோசிக்கும்போது, 'நான்கு அண்ணன் தம்பிகள் சேர்ந்து 50 ஆயிரம் வைத்துவிடலாம்' என தனம் கூறுகிறார் .
அதே நேரத்தில் கதிர் - முல்லை 5000 மொய் வைக்கிறார்கள், கண்ணன் - ஐஸ்வர்யாவும் 5000 மொய்யாக வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் மீனா கேட்கும்போது 'நாம என்னைக்கு தனியா பண்ணிருக்கோம்' என கூறுகிறார் ஜீவா.
கடைசியில் ஜீவா மட்டும் எந்த மொய்யும் வைக்கவில்லை என்கிற சூழ்நிலை வரும்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் அடுத்த பிரச்சனை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.