திடீரென நடந்துமுடிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலத்தின் திருமணம்- அழகிய ஜோடியின் புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் படு மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரே பிரச்சனை தான், கடைசி, வீடு என எல்லாமே போனது.
ஆனாலும் ஒற்றுமையாக எல்லா பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்கள், இந்த வாரம் பார்த்தால் ஒரே கர்ப்பமான காட்சிகள் தான்.
கதிர்-முல்லையை தொடர்ந்து இப்போது ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் கர்ப்பமான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
முடிந்த திருமணம்
இந்த தொடரில் பிரசாந்த் என்ற வேடத்தில் நடிக்க வந்தவர் மகேஷ். இவருக்கும் மீனாவின் தங்கை ஸ்வேதாவிற்கும் தொடரில் நிச்சயதார்த்தம் முடிந்தது, அடுத்து திருமண காட்சிகள் எப்போது வரும் என தெரியவில்லை.
இப்படியான நேரத்தில் தான் மகேஷிற்கு நிஜத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
மகேஷிற்கும், பிரேமலதா என்பவருக்கும் இன்று சென்னையில் உள்ள இவிஎஸ் மஹாலில் திருமணம் நடந்துள்ளது. மகேஷ் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் முத்தழகு சீரியலிலும் நடித்து வருகிறார். இவரது திருமணத்திற்கு முத்தழகு தொடர் பிரபலங்கள் மட்டும் வந்திருந்தனர்.
சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிகிறதா?- ஹிட் படங்கள் கொடுத்த நாயகி