சரவணன் - தங்கமயில் குழந்தைக்கு பெயர் வெச்சாச்சு.. மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! ப்ரோமோ வீடியோ
Pandian stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த வாரம், தங்கமயில் - சரவணனின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்போது தங்கமயிலுக்கு குழந்தை பிறந்ததால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

என்னதான் தங்கமயிலை சரவணன் வெறுத்து ஒதுக்கியிருந்தாலும் கூட, பிள்ளையை பெற்றெடுத்த பின் அவரை மருத்துவமனையில் நன்றாக பார்த்துக்கொண்டார் சரவணன்.

குழந்தையின் பெயர்
இதன்பின், பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கலாம் என அனைவரும் யோசித்து வந்தனர். இந்த நிலையில், வரும் வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடக்கப்போகும் காட்சிகள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில், நல்ல நேரம் முடிவதற்குள் குழந்தைக்கு பெயர் வையுங்கள் என பாண்டியன் கூறுகிறார்.

இதன்பின், குழந்தையின் காதருகே சென்று, 'கோமதி பாண்டியன்' என்கிற பெயரை சூட்டினார் தங்கமயில். இதை கேட்டு கோமதியும், பாண்டியனும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்துவிட்டனர். இதோ அந்த ப்ரோமோ:
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
இறப்புச் சான்றிதழுக்காக காத்திருந்த உயிரிழந்தவரின் உறவினர்கள்: மருத்துவரின் மோசமான செயல் News Lankasri