பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை தீபிகா வாங்கியுள்ள புதிய கார்- குடும்பத்துடன் அவர் வெளியிட்ட போட்டோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கு மேலாக படு ஹிட்டாக ஓடிய ஒரு தொடர்.
அண்ணன்-தம்பிகள் அவர்களின் பாசத்தை வெளிக்காட்டும் விதமாக, கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என்பதை அழகாக காட்டிய ஒரு தொடர் இது.
அண்மையில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து குடும்பத்தினர் ஒன்று சேர்ந்தது போல் காட்டி சீரியலை ஒருவழியாக முடித்துவிட்டார்கள்.
இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் அப்பா-மகன்கள் சென்டிமென்ட் வைத்து தொடர் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
பிரபலம் வாங்கிய கார்
இந்த தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா. தொடரை முடித்த கையோடு புதிய காரை வாங்கியுள்ளார்.
புதிய காருடன் தனது அப்பா-அம்மாவுடன் இணைந்து அழகிய புகைப்படம் ஒன்று எடுத்து தனது இன்ஸ்டாவிலும் இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.