பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரியப்போகிறதா, அதிர்ச்சியளிக்கும் வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் கடந்த சில வாரங்களாகவே ஜீவா கதாபாத்திரத்திற்கு தனி சம்பாத்தியம் இல்லை என்பதால் வீட்டில் சிக்கல்களையும் அவமானங்களையும் சந்தித்து வருவது போல் காட்டி வருகிறார்கள்.
கடந்த எபிசோடில் கூட மீனா தனது குழந்தையுடன் நடுத்தெருவில், வெயிலில் நின்றுகொண்டிருந்தார். இதனால் மளிகை கடையை அப்படியே விட்டுவிட்டு மீனாவை அழைத்து வர ஜீவா சென்றுவிட்டார்.
அதிர்ச்சியளிக்கும் ப்ரோமோ
கடையை அப்படியே விட்டுவிட்டு தம்பி சென்றுவிட்டானா என்று மூர்த்தி கோபப்படுகிறார். ஏன், எதற்காக அவர் இப்படி செய்தார் என்று விசாரிக்காமல் மூர்த்தி தனது தம்பி ஜீவாவிடம் கடுமையாக பேசுகிறார்.
இதில் கோபப்படும் ஜீவா, தனது அண்ணன் மூர்த்தியிடம் சண்டை போடுகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டாக பிரியப்போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதன் ப்ரோமோ தற்போது வெளிவந்துள்ளது, இதோ பாருங்க..
இரண்டு நாட்களில் அகிலன் செய்த வசூல், எவ்வளவு தெரியுமா