வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
அண்ணன்-தம்பிகள் பாசத்தை உணர்த்தும் கதைக்களம் வெற்றிகரமாக முடிவடைய 2ம் பாகம் அதே வேகத்தில் தொடங்கப்பட்டது. முதல் பாகத்தில் நடித்த சிலர் இந்த 2ம் பாகத்தில் உள்ளார்கள்.
அப்பா-மகன்கள் உள்ள கூட்டுக் குடும்ப கதையாக தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
மீனா-கோமதி
இப்போது கதையில் செந்தில்-மீனா தனிவீடு செல்கிறார்கள். இன்றைய எபிசோடில், செந்தில் மீனாவிடம் பணம் கேட்கிறார், ஆனால் அவர் ஒரு பைசா கூட தர மாட்டேன் என கூறிவிட்டு செல்கிறார்.
அறையை விட்டு வெளியே வந்தவர் கோமதிக்காக வாங்கிய வளையலை அவரிடம் தருகிறார் மீனா. அதைப் பார்த்த கோமதி மிகவும் எமோஷ்னலாக மீனாவும் அழுதுவிடுகிறார். நான் பணம் கேட்டபோது தர மாட்டேன் என கூறிவிட்டு இப்போது வளையலா என்ற கோபத்தில் செந்தில் அறைக்கு செல்கிறார்.
பின் அனைவரும் புதிய வீட்டிற்கு வருகிறார்கள், செந்தில் கோமதியிடம் பேச முயற்சி செய்ய அவர் பேச மறுக்கிறார்.