ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அடுத்து நடக்கவிருப்பது
ராஜியிடம் இருந்து திருடப்பட்ட நகை மீண்டும் அவருக்கு கிடைத்துள்ளது. அந்த நகையை வைத்து தனது கணவன் கதிருக்கு கார் ட்ராவல்ஸ் தொழில் வைத்து கொடுக்க முடிவு செய்கிறார் ராஜி. அதற்காக வங்கிக்கு செல்லும் ராஜி, தன்னிடம் உள்ள அனைத்து நகையையும் விற்க கொடுக்கிறார்.
நகையை வாங்கி கொண்டு உள்ள செல்லும் நபரை, அங்குள்ள ராஜியின் சித்தப்பா சக்திவேல் பார்த்துவிடுகிறார். இது நம்முடைய வீட்டு நகையாச்சே என ராஜி எதற்காக இங்கு வந்துள்ளார் என அந்த நபரிடம் சக்திவேல் கேக்கிறார். நகை விற்க ராஜி வந்திருப்பதை அறிந்துகொண்டு, நான் சொல்வது போல் செய்துவிடுங்க என கூறுகிறார்.
அதே போல் நகைக்கான ரசீதை ராஜியிடம் கொடுத்துவிடுகிறார். ஆனால், பணத்தை தரவில்லை. மாலை வந்த பணத்தை வாங்கிக்கோ என கூறிவிடுகிறார். சக்திவேலின் இந்த சதியால் என்னென்ன பிரச்சனை ஏற்படப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ப்ரோமோ வீடியோ..

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
