கணவர், மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா.. அழகிய குடும்ப புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் சொந்த வீட்டை இழந்த, வேறொரு வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இதற்க்கெல்லாம் காரணமாக இருந்தது மீனாவின் தந்தை.
மேலும், சமீபத்தில் எபிசோடில் மீனா தங்கையின் நிச்சயதாரத்திற்கு சென்று அவமானப்பட்டு வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது தந்தையை திட்டினார் மீனா.
கணவர், மகனுடன் சுஜிதா
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் பிரபலமான நடிகையாவார்.
இந்நிலையில், நடிகை சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..


