விருந்தில் ஏற்பட்ட சண்டை.. வெளிவந்த உண்மையால் கோபத்தில் பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தனது அண்ணன்கள் முத்துவேல், சக்திவேல் இருவரும் தன் வீட்டிற்கு விருந்துக்கு வருகிறார்கள் என்பதால், மகிழ்ச்சியுடன் பல விதமான உணவுகளை செய்தார் கோமதி.

தனது அம்மா கேட்டுக்கொண்ட ஒரே காரணத்தினால் மட்டுமே முத்துவேல், சக்திவேல் இருவரும் பாண்டியனின் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்குள் வந்த சமயத்தில் இருந்தே பாண்டியன் குடும்பத்தை வாய் வார்த்தையில் குத்திக்கொண்டே இருந்தார் சக்திவேல்.
சோழனை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய நிலா.. காதல் மலர்ந்ததா? அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
விருந்தில் ஏற்பட்ட சண்டை
ஒருவழியாக அனைவரும் சாப்பிட அமர்ந்த நேரத்தில், கதிர் - ராஜி திருமணம் நடைபெற்றது குறித்து சக்திவேல் வாயை திறக்க, ஒரு கட்டத்தில் சண்டையாக மாறிவிட்டது. பல விஷயங்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், ராஜிக்கும் கதிருக்கும் கோமதிதான் திருமணம் செய்து வைத்தார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.

ஆனால், இந்த சண்டையில் கோபத்தில் அதனை கோமதி கூறிவிட்டார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டனர். பாண்டியனும் இதனால் ஷாக்கிவிட்டார். இதன்பின் முத்துவேல், சக்திவேல் இருவரும் பாண்டியன் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டனர். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.