புதிய முல்லைக்கு சித்ராவுடைய ஸ்பெஷல் விஷயம் உள்ளதா?- அவரின் முதல் எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் குடும்ப பாங்கான கதைக்களத்தில் 3 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரமான முல்லைக்கு மாற்றங்கள் நடந்துள்ளன.
சித்ரா இந்த வேடத்தில் நடித்து அழகு சேர்த்து வந்தார், பின் அவர் இல்லாத காரணத்தால் காவ்யா என்ற நடிகை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார்.
இப்போது அவரும் விலக புதியதாக லாவண்யா என்ற நடிகை நடிக்க வந்துள்ளார்.
சித்ராவின் சிறப்பு விஷயம்
லாவண்யா முல்லையாக நடிக்கும் முதல் எபிசோட் இன்று முதல் வரப்போகிறது. லாவண்யாவிற்கு சித்ரா நடிக்கும் போது குரல் கொடுத்தவர் தான் தற்போது இவருக்கு டப்பிங் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
முல்லையாக அவரது குரலையும் ரசித்த ரசிகர்களுக்கு இது கொண்டாட்ட செய்தியாக அமைந்துள்ளது.
USAவில் முதன்முறையாக தமிழ்ப்படம் செய்துள்ள சாதனை- மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்