விரைவில் முடியப்போகும் விஜய் டிவி தொடரின் ஹிட் சீரியல் கிளைமேக்ஸ் தேதி இதோ...
பனிவிழும் மலர்வனம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
கடந்த ஜுன் 2024ம் ஆண்டு விஜய்யில் ஒளிபரப்பான ஒரு தொடர் பனிவிழும் மலர்வனம்.
சித்தார்த் குமரன், வினுஷா தேவி, ஷில்பா மற்றும் சத்யா என பலர் நடிக்க தொடங்கப்பட்ட இந்த தொடர் இடையில் சில கதாபாத்திர மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வந்தது.
பெரிய அளவில் சீரியல் ரீச் பெறவில்லை என்றாலும் சுமாராக ஓடியது.
கிளைமேக்ஸ்
கடந்த சில வாரங்களுக்கு முன்பே இந்த தொடர் முடிவுக்கு வரும் செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பனிவிழும் மலர்வனம் சீரியல் நாளை மார்ச் 29 தான் முடிவுக்கு அதாவது கிளைமேக்ஸ் காட்சிகளாம்.
நாளையோடு இந்த தொடர் முடிவுக்கு வர இனி மதியம் 1 மணிக்கு எந்த தொடர் ஒளிபரப்பாகும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.