பாபநாசம் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது கமல் இல்லை, வேறு யார் தெரியுமா..?
பாபநாசம்
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி 2015ல் வெளிவந்த திரைப்படம் பாபநாசம். இது மலையாளத்தில் வெளிவந்த திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து கவுதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில், கலாபம் மணி ஆகியோர் நடித்திருந்தனர். மலையாளத்தை போலவே தமிழிலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

முதலில் நடிக்கவிருந்த ஹீரோ
இந்த நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது கமல் கிடையாதாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்துள்ளார். இப்படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தபின், ரஜினிகாந்திடம் படத்தை போட்டு காட்டி ஹீரோவாக நடிக்க கேட்டுள்ளனர்.

ஆனால், இப்படத்தில் கமல் ஹாசன் நடித்தால் தான் சரியாக இருக்கும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். கமல் ஹாசனிடமும் இதுகுறித்து பேசியுள்ளார். அதன்பின், திரிஷ்யம் திரைப்படத்தை பார்த்த கமல் ஹாசன் தமிழில் அதனை ரீமேக் செய்து நடித்துள்ளார்.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri