2 நாட்களில் பறந்து போ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பறந்து போ
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய தலைசிறந்த படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் இயக்குநர் ராம். இவர் இயக்கத்தில் கடந்த 4ம் தேதி திரைக்கு வந்த படம்தான் பறந்து போ.

மிர்ச்சி சிவா இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் அஞ்சலி, அஜூ வர்கீஸ், மிதுல் ரயான் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், இப்படம் 2 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.

இதுவரை உலகளவில் பறந்து போ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராமின் பறந்து போ படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu