40வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.
இப்படத்தின் வெற்றியின் மூலம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். இவர் கைவசம் தற்போது எஸ்கே 23 மற்றும் பராசக்தி என இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் 40வது பிறந்தநாள். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். மேலும் இன்று அவருடைய படங்களின் அப்டேட்ஸ் தொடர்ந்து வெளிவரவுள்ளது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் 40வயது எட்டியுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 120 கோடி முதல் ரூ. 150 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இவர் தற்போது ரூ. 50 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் சென்னையில் இவருக்கு சொந்தமான, பல கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களா இருக்கிறது. ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

கேம் விளையாட முடியாததால் சிறுவன் செய்த செயல் - 100க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து தேடிய போலீசார் IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
