பராசக்தி படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பராசக்தி
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த படம் பராசக்தி. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஹிந்தி திணிப்பிற்காக போராடிய தமிழர்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது என தகவல் வெளிவந்த நாளில் இருந்தே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது.
அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளிவந்த பராசக்தி படம், ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. மேலும், சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
வசூல்
பராசக்தி படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பராசக்தி படத்தின் இறுதி வசூல் ரூ. 90 கோடி என திரை வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால், படக்குழு இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
