சிவகார்த்திகேயனின் பராசக்தி பட சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ள 2 தொலைக்காட்சி... எந்தெந்த டிவி தெரியுமா?
பராசக்தி
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பராசக்தி என்று சொன்னதுமே முதலில் நியாபகம் வருவது சிவாஜி கணேசன் அவர்கள் தான், நீதிமன்றத்தில் அவர் பேசிய வசனம்.
இப்போது அதேபட தலைப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா நடிக்க ஒரு புதிய படம் தயாராகியுள்ளது. பழைய காலத்து கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.
படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது, நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நிறைய விஷயங்கள் பேசியிருந்தார், அந்த வீடியோக்களும் வெளியாகிவிட்டது.

சாட்டிலைட்
வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, டிரைலர் என அனைத்தும் வெளியாகி மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்திற்கான புரொமோஷன் வேலைகள் மாஸாக நடந்து வர படத்தின் சாட்டிலைட் உரிமம் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை விஜய் டிவி மற்றும் கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளார்களாம். அதோடு டிஜிட்டல் ரைட்ஸ் Z5 வாங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.