சிவகார்த்திகேயனுடன் பிள்ளையார்பட்டிக்கு சென்ற பராசக்தி பிரபலங்கள்.. வெளிவந்த புகைப்படம்
சிவகார்த்திகேயன்
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட்-ஐ தனக்கென்று உருவாக்கிவிட்டார் சிவகார்த்திகேயன். உலகளவில் இப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தி திணிப்பு எதிர்ப்பை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம்தான் பராசக்தி.
இப்படத்தில் முதலில் சூர்யா நடிக்கவிருந்த நிலையில், அவர் வெளியேறியதன் காரணமாக, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் நடிகர் ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்க, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிள்ளையார்பட்டியில் சிவகார்த்திகேயன்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன், அதர்வா மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோர் பிள்ளையார்ப்பட்டி விநாயகர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சுதா கொங்கரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
