படு சோகமான நிலையில் மறைந்த பாடகி பரவை முனியம்மா குடும்பம்... உதவி கிடைக்குமா?
பரவை முனியம்மா
பரவை முனியம்மா, நாட்டுப்புற பாடல்களால் மிகவும் பிரபலமானவர். 60 வயதிற்கு பிறகு பரவை முனியம்மாவுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது, நடிகர் விக்ரம் நடித்த தூள் படத்தில் முதன்முறையாக பரவை முனியம்மா நடித்தார்.
அதில் இடம்பெற்ற சிங்கம் போல நடந்து வரான் செல்லப் பேராண்டி பாடலும் பாட மிகவும் பிரபலமானது.
முதல் படமே செம ஹிட்டடிக்க பரவை முனியம்மா தூள், காதல் சடுகுடு, கோவில், தேவதையை கண்டேன், ஏய், சண்டை, பூ, தோரணை, தமிழ் படம், பலே பாண்டியா, வேங்கை, வீரம், மான் கராத்தே, சவாலே சமாளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
கடைசியாக சதுர அடி என்ற படத்தில் நடித்தார். பெரும்பாலும் பாட்டி கதாப்பாத்திரத்திலேயே நடித்துள்ள பரவை முனியம்மா, நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும் தற்போதைய ட்ரென்டுக்கு ஏற்ப கலக்கியிருக்கிறார்.
குடும்பம்
உடல்நலக் குறைவால் மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவித்தவர் 2020ம் ஆண்டு உயிரிழந்தார். சமீபத்தில் பரவை முனியம்மா குடும்பத்தினர் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர்.
அதில் அவரது மருமகள் பேசுகையில், பொம்பள பிள்ளையை எல்லாம் கஷ்டப்பட்டு கரை சேர்த்துட்டாங்க, கஷ்ட காலத்தில் இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டார்கள். இப்போது அவரின் மாற்றுத் திறனாளி மகனை நான் தான் ஒரு அம்மாவா பார்த்துகிட்டு இருக்கேன்.
ஏதாவது உதவி செய்யணும்னா அவனுக்கு ஒரு வேலை கிடைக்க உதவி செய்ங்க, எங்க பிள்ளைங்க படிப்புக்கு ஏதாவது உதவி செய்ங்க, வேற எதுவும் நான் கேட்கல என பேசியுள்ளார்.