ஜெயராம், ஊர்வசி நடித்த பரிமளா & கோ படம் இதுவரை செய்துள்ள வசூல்.. விவரம் இதோ
பரிமளா & கோ
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

அப்படி பல முறை தன்னுடைய படங்களால் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்திய இவருடைய இயக்கத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான், பரிமளா & கோ. இப்படத்தை பசங்க தயாரிப்பு நிறுவனம் மற்றும் லைகா இணைந்து தயாரித்திருந்தது.

பாக்ஸ் ஆபிஸ்: அர்ஜுன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இப்படத்தில் ஜெயராம் - ஊர்வசி இணைந்து நடித்திருந்தனர். மேலும், சஞ்சனா, அனந்திகா, சாண்டி, மிஸ்கின் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு FoxN என்பவர் இசையமைத்துள்ளார்.
வசூல்
டார்க் காமெடி திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் வசூலில் சரிவை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், 8 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 12.5 கோடி வசூல் செய்துள்ளது.
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri