பரிமளா & கோ திரைப்படத்தின் வசூல் விவரம்.. லாபத்தை எட்டுமா?
பரிமளா & கோ
கடந்த ஜூன் 5-ஆம் தேதி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் பரிமளா & கோ. முன்னணி இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்க, ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்திருந்தனர்.

லைகா மற்றும் பசங்க தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சஞ்சனா, அனந்திகா, சாண்டி, மிஸ்கின் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

எதிர்மறையான விமர்சனங்கள்
டார்க் காமெடி திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் ஓப்பனிங் பெரிய அளவில் கிடைக்கவில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

லாபத்தை எட்டுமா
இந்த நிலையில், பரிமளா & கோ திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 18 கோடி வசூலாகியுள்ளது. இதன் மூலம் 80% சதவீதம் பட்ஜெட் ரிக்கவரி செய்யப்பட்டுள்ளது. விரைவில் 100% சதவீதத்தை தாண்டி லாபத்தை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu