முதல் படம் என்ன ஆச்சு? பரிதாபங்கள் கோபி, சுதாகர் கொடுத்த விளக்கம்
கோபி சுதாகர்
தற்சமயத்தில் youtubeல் பாப்புலராக இருக்கும் பிரபலங்கள் தான் டிவி மற்றும் சினிமாவில் எளிதில் வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.
அப்படி பரிதாபங்கள் என்ற சேனல் மூலம் பெரிய அளவில் பிரபலமாக இருக்கும் கோபி மற்றும் சுதாகர் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இது அவர்களது தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படம் என குறிப்பிட்டு இருந்தனர்.
முதல் படம் என்ன ஆச்சு
2019ல் பரிதாபங்கள் டீம் crowdfunding முறையில் ஒரு படத்தை தொடங்கினார்கள். மணி கம்ஸ் டுடே கோஸ் டுமாரோ யா என அந்த படத்திற்கு பெயர் வைத்து அவர்கள் பணிகளை தொடங்கிய நேரத்தில் கொரோனா லாக்டவுன் வந்ததால் நிறுத்திவிட்டனர்.
அதன் பட்ஜெட் அதிகமாகிவிட்டதால் அதை நிறுத்திவிட்டு அப்படியே இப்போது இரண்டாம் படத்திற்கு வந்திருப்பதாக தெரிவித்து உள்ளனர். அந்த படத்திற்கு கோ-பிரோடயூசர் கிடைத்தால் நிச்சயம் தொடங்குவோம் என கோபி-சுதாகர் கூறி இருக்கின்றனர்.
முதல் படத்திற்கு பணம் கொடுத்தவர்களுக்கு கைமாறாக தான் இந்த படத்தை எடுப்பதாகவும் கூறி இருக்கின்றனர். முதல் படம் ப்ரீ-ப்ரொடக்ஷன் மட்டுமே நடந்தது, ஷூட்டிங் போகவே இல்லை எனவும் கூறி இருக்கிறார்கள்.
Bigg Boss 6 டைட்டில் ஜெயித்த அஸீம்! 50 லட்சத்தோடு இப்படி ஒரு பெரிய பரிசா

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
