இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்று பார்க்கிங்.. இரண்டு நாட்கள் வசூல் விவரம்
பார்க்கிங்
அயோத்தி, போர் தொழில், டாடா, குட் நைட், சித்தா ஆகிய படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள சிறந்த திரைப்படங்களில் ஒன்று பார்க்கிங்.
அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இப்படம் தனித்துவமான கதைக்களத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளார். விமர்சன ரீதியாக இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பை கிடைத்த நிலையில், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது.
வசூல்
முதல் நாள் உலகளவில் ரூ. 45 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்திருந்த இப்படம் இரண்டாம் நாள் முடிவில் ரூ. 90 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri