பரோல் திரைவிமர்சனம்
Tripr Entertainment தயாரிப்பில் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பரோல். ஆர்.எஸ். கார்த்திக், லிங்கா இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்
சிறு வயதிலேயே சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்லும் கரிகாலனிடம் { லிங்கா }, சிறையில் சிலர் தகாத முறையில் நடந்துகொள்கிறார்கள். இதனால் கோபமடையும் கரிகாலன், அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்கிறார். சிறு வயதிலேயே சிறைக்கு சென்ற கரிகாலன் ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியே வருகிறார்.
கரிகாலனை கஷ்டப்பட்டு வெளியே எடுக்கிறார் அவரது தாய் ஜானகி சுரேஷ். அண்ணன் கரிகாலன் மீது மட்டுமே தனது தாய் அன்பு செலுத்துகிறார் என்று சிறு வயதில் இருந்து நினைத்துக்கொண்டு இருக்கிறார் தம்பி கோவலன் { கே.எஸ். கார்த்திக் }. தனது தாய் எத்தனையோ முறை கூறியும் கொலை செய்வதை கரிகாலன் நிறுத்தவே இல்லை.
அப்படி தொடர்ந்து கொலை செய்து வரும் கரிகாலன் ஒரு முறை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையில் சிறைக்கு செல்கிறார். எப்படியாவது தனது மகனை சிறையில் இருந்து வெளியே எடுக்கவேண்டும் என்று போராடி வரும் அவரது தாய் தீடீரென இறந்துபோகிறார். தனது அண்ணன் மீது இருக்கும் வெறுப்பினால் தன்னுடைய தாய்க்கு இறுதி சடங்கை தானே செய்து விடலாம் என்று முடிவு செய்கிறார் கோவலன்.
ஆனால், கரிகாலன் கூட்டாளிகளின் தலையீட்டினால், கரிகாலனை பரோலில் வெளியெடுக்கும் முயற்சியை மேற்கொள்கிறார். இந்த முயற்சியில் கரிகாலனுக்கு பரோல் கிடைக்காதா? அதற்குள் சிறையில் இருந்த கரிகாலன் என்ன செய்தார்? அண்ணன் மீது இருக்கும் கோபத்தினால் கோவலன் எடுத்த முடிவு என்ன? இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
நடிகர்கள் கே.எஸ். கார்த்தி - லிங்கா இருவருமே கதைக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள். கோபத்தின் உச்சத்தில் மனிதர்கள் எடுக்கும் தவறான முடிவை தங்களது நடிப்பினால் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். கரிகாலன் - கோவலனின் தாயாக நடித்துள்ள நடிகை ஜானகி சுரேஷ் படத்தை தாங்கி நிற்கிறார். மிகவும் வலுவான கதாபாத்திரம்.
வக்கீலாக நடித்துள்ள நடிகை வினோதினி வழக்கம்போல் கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொண்டு நடித்துள்ளார். கல்பிகா கணேஷ் மற்றும் மோனிஷா முரளி இருவரின் நடிப்பும் ஓகே. இயக்குனர் துவராக் ராஜா எடுத்துக்கொண்ட கதைக்களம் புதுமை. திரைக்கதையை வடிவமைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ஆனால், இன்னும் கொஞ்சம் புரியும்படி அமைத்திருக்கலாம்.
துவங்கத்தில் இருந்து இறுதி வரை Lag இல்லாமல் நகர்கிறது. அதற்காக இயக்குனருக்கு தனி பாராட்டு. முனீஸ் எடிட்ங் படத்திற்கு பலம். ராஜ் குமார் அமலின் பின்னணி இசை திரைக்கதை தொய்வு இல்லாமல் நகர உதவுகிறது. மகேஷின் ஒளிப்பதிவுக்கு பாராட்டு. வைலன்ஸ் அதிகமாக இருந்தாலும், படத்திற்கு தேவையாக அமைத்துள்ளது. சண்டை காட்சிகளின் வடிவமைப்பு பிரமாதம்.
பிளஸ் பாய்ண்ட்
கே.எஸ். கார்த்தி, லிங்கா, ஜானகி சுரேஷ் நடிப்பு
இயக்கம், கதைக்களம்
பின்னணி இசை
மைனஸ் பாய்ண்ட்
சற்று புரியும்படி திரைக்கதை அமைத்திருக்கலாம்
மொத்தத்தில் வெறித்தனமான மேக்கிங்கில் திரையரங்கை அதிர வைக்கிறது பரோல்..
பிளாக் பஸ்டர் ஹிட்டாகி இருக்கும் லவ் டுடே திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி ஷெர் தெரியுமா?