மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்! இதற்காக தான்
இரவின் நிழல்
பார்த்திபனின் இரவின் நிழல் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனபோது நல்ல வரவேற்பை பெற்றது. உலகத்தின் முதல் சிங்கிள் ஷாக் நான் லீனியர் படம் இது என பார்த்திபன் விளம்பரம் செய்த நிலையில், அது முதல் படம் இல்லை என ப்ளூ சட்டை மாறன் சர்ச்சை ஏற்படுத்த அது பற்றி இருவரும் மோதிக்கொண்டனர்.
இதை எல்லாம் தாண்டி ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தனர்.
ஓடிடி ரிலீஸ்
இரவின் நிழல் ஓடிடி-யில் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அது அமேசான் ப்ரைமில் வெளியாக இருப்பதாக பார்த்திபன் தெரிவித்து இருக்கிறார்.
ஓரிரு தினங்களில் படம் வெளிவரும் என சொன்ன நிலையில் இதுவரை வரவில்லை. தாமதத்திற்கு என்ன காரணம் என பார்த்திபன் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
"மன்னிக்க…. நானும் ஆவலுடனே காத்திருக்கிறேன்,but some technical issues it’s taking time-ன்னு Amazon-ல சொல்றாங்களாம்.மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டு தெரிவிக்கிறேன்.அதுவரை பொறுத்தருள்க திரையரங்கில் நீங்கள் எனக்களித்த வரவேற்பே என்னைத் திக்குமுக்காட வைத்தது.நான் பெரிதும் மதிக்கும் நீங்கள் OTT-யில் வர காத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளித்தாலும்,தாமதமாவதற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டு,ottயில் வருகையில் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் ஆயிஷா இரண்டு முறை விவாகரத்து ஆனவர்! முன்னாள் காதலர் சொன்ன அதிர்ச்சி விஷயம்