ஆடுகளம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த பிரபல நட்சத்திரம்.. யார் தெரியுமா
ஆடுகளம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் ஆடுகளம். இப்படத்தில் கதாநாயகியாக டாப்ஸி நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
இப்படம் 6 தேசிய விருதுகளையும் வென்றது. நரேன், கிஷோர், ஜெயபாலன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் பேட்டைக்காரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் ஜெயபாலன்.
முதலில் நடிக்கவிருந்த நடிகர்
ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் ஜெயபாலன் கிடையாதாம். நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தான் ஆடுகளம் திரைப்படத்தில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தாராம்.
இந்த தகவலை நம் சினிஉலகம் youtube சேனலுக்கு பேட்டியளித்த போது கூறினார். மேலும் டீன்ஸ் படம் குறித்து தனது சினிமா அனுபவங்கள் குறித்தும் இந்த பேட்டியில் அவர் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து முழுமையாக தெரிந்துகொள்ள இந்த பேட்டியை பாருங்க.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
