இந்தியன் 2 படத்தின் இரண்டு நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
இந்தியன் 2
2024ஆம் ஆண்டு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் முக்கியமான ஒன்று இந்தியன் 2. ஷங்கர் - கமல் ஹாசன் கூட்டணியில் உருவான இப்படம் கடந்த 12ஆம் தேதி திரைக்கு வந்தது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, விவேக், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
வசூல்
இந்தியன் 2 திரைப்படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனம் மோசமாக இருக்கும் நிலையில், முதல் நாள் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், இரண்டு நாட்கள் முடிவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தியன் 2 திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 32 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri