பசங்க படத்தில் நடித்த பையனா இது? இப்போது இப்படி மாறிட்டாரே! போட்டோ இதோ
பசங்க படத்தில் அன்பு ரோலில் நடித்த கிஷோர் தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க.
பசங்க
பாண்டிராஜின் பசங்க படம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்று. அந்த படத்தில் அன்புக்கரசு என்ற ரோலில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரம் கிஷோருக்கு தேசிய விருதும் கிடைத்தது. மேலும் சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த திரைக்கதைக்கான விருதும் பசங்க படத்திற்காக கிடைத்தது.
படம் 2009ல் வெளிவந்த நிலையில் தற்போது தான் மாநில அரசு அந்த வருடத்திற்கான விருதை அறிவித்து இருக்கிறது. அதற்கான பரிசளிப்பு விழாவும் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் பசங்க படத்தில் நடித்த கிஷோருக்கும் விருது வழங்கப்பட்டது.
ஆளே மாறிய 'அன்பு' கிஷோர்
பசங்க படத்தில் சின்ன பையனாக நடித்த கிஷோர் தற்போது தாடி வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.
அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.