X-men பட புகழ் நடிகர் 'பேட்ரிக் ஸ்டீவர்ட்' 86 வயதில் காலமானார்

By Karthick Raja Oct 30, 2026 03:00 AM GMT
Report

Patrick Stewart Passes Away: ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார். இவருடைய வயது 86. இவரது மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

உலக சினிமாவே எதிர்பார்க்கும் கிறிஸ்டோபர் நோலன் அடுத்தபடத்தின் ஹீரோக்கள் இவர்கள் தான்...

உலக சினிமாவே எதிர்பார்க்கும் கிறிஸ்டோபர் நோலன் அடுத்தபடத்தின் ஹீரோக்கள் இவர்கள் தான்...

பேட்ரிக் ஸ்டீவர்ட்

'ஸ்டார் ட்ரெக் (Star Trek)' வெப் சீரிஸில் ஜீன்-லூக் பிகார்ட் கதாபாத்திரத்திலும், 'X-men' திரைப்படங்களில் சார்லஸ் சேவியர் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்.

X-men பட புகழ் நடிகர்

இவர் 'அல்சைமர் நோய் மற்றும் லூயி பாடி டிமென்ஷியா (Alzheimer's disease and Lewy body dementia)' ஆகியவற்றுடன் சிறிது காலம் போராடி வந்த நிலையில், தனது 86-வது வயதில் காலமானார். இவருடைய மரணம் ரசிகர்கள் மத்தியில் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.

X-men பட புகழ் நடிகர்

அவரது மரண செய்தி, அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் காலமான பேட்ரிக் ஸ்டீவர்ட், அல்சைமர் நோயுடன் போராடி வந்ததாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X-men பட புகழ் நடிகர்

இவருடன் இணைந்து நடித்த பிரபல முன்னணி ஹாலிவுட் நடிகர் ஹியூ ஜேக்மன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், இவர் நடிப்பில் அடுத்ததாக அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், மார்வெல் ஸ்டுடியோஸ் தங்களது இரங்கலை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US