பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் நடிகை பாவ்னியின் முதல் கணவர் யார் தெரியுமா?- இதோ அவர்களது திருமண புகைப்படம்
நடிகை பாவ்னி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். 5வது சீசன் இந்த ஜனவரி மாதம் தான் முடிவடைந்தது, அதில் வெற்றியாளராக ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியும் சூப்பராக நடந்தது, அதில் அமீர்-பாவ்னியும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்ச்சி மூலம் நடிகை பாவ்னி-அமீர் காதல் ஜோடிகளாக இணைய திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.
பாவ்னி முதல் கணவர்
நடிகை பாவ்னிக்கு, பிரதீப் குமார் என்பவருடன் 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது, இருவரும் சந்தோஷமாக தான் இருந்துள்ளார்கள். ஆனால் திடீரென பிரதீப் தற்கொலை செய்து உயிரிழந்தார், அவரின் பிரிவில் இருந்து வெளியே வரவே பாவ்னி பல வருடங்கள் எடுத்தார்.
பாவ்னியின் இரண்டாவது திருமண செய்தி வர சந்தோஷத்தில் ரசிகர்கள் அவரின் வருங்காலம் நல்லதாக அமைய வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.
பாவ்னியின் கணவர் பிரதீப்பும் சீரியல் நடிகர் ஆவார், இதோ இருவரின் திருமண புகைப்படம்,
நடிகை விசித்ராவின் மகனை பார்த்துள்ளீர்களா?- பிரபலமே வெளியிட்ட வீடியோ

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
