சண்டையில் ஈடுபடுகிறார்கள், சினிமாவை கொல்லாதீர்கள்.. பவன் கல்யாண் வேண்டுகோள்!
பவன் கல்யாண்
தெலுங்கு சினிமாவை ஆளும் மெகா குடும்பத்தின் ஒரு நடிகர் பவன் கல்யாண். அக்கட அம்மி இக்கட அப்பாயி என்ற படத்தின் மூலம் கடந்த 1996ம் ஆண்டு திரைத்துறையில் நாயகனாக அறிமுகமானார்.
ஆண்டுக்கு ஒரு படம் 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 30 படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் OG.
சுஜித் இயக்கிய இப்படத்தில் முன்னணி நடிகர் பவன் கல்யாண் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் விழா ஒன்று நடைபெற்றது.
வேண்டுகோள்!
இதில், பவன் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " ரசிகர்களுக்கு படத்துக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இயக்குநர் சுஜித் தனது மனைவியையும் குழந்தையையும் ஒன்றரை மாதமாகப் பார்க்கவில்லை.
ஆனால், அனைவரும் படும் கஷ்டங்களை அறியாமல் ரசிகர்கள் இணையத்தில் சண்டையில் ஈடுபடுகிறார்கள். ஒரு காலத்தில் திரைப்படங்கள் 100 நாட்கள் கொண்டாடிய நாட்கள் எல்லாம் இருந்தது.
ஆனால், இப்போது ஒரு படத்தின் ஆயுட்காலம் 6 நாட்கள் மட்டுமே. ஆகையால் தயவுசெய்து சினிமாவை கொல்லாதீர்கள். ஒருவருக்கொருவர் பாராட்டுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.