தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன் மார்க் ஷங்கரின் உடல்நிலை எப்படி உள்ளது... சிரஞ்சீவி கொடுத்த தகவல்
பவன் கல்யாண்
தெலுங்கு சினிமா நடிகரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாணின் வீட்டில் சமீபத்தில் ஒரு விபத்து.
அதாவது அவரது இளைய மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். சமீபத்தில் பள்ளியில் தீ விபத்து ஏற்பட அதில் பவன் கல்யாணின் மகன் ஷங்கர் சிக்கியுள்ளார்.
அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தன.
தற்போதைய நிலை
இந்த செய்தி கேட்டதும் பவன் கல்யாணின் சகோதரர் சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சிங்கப்பூர் சென்றனர்.
மார்க் ஷங்கரை பார்த்த சிரஞ்சீவி தற்போது அவர் எப்படி உள்ளார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், எங்கள் மகன் மார்க் ஷங்கர் வீட்டிற்கு வந்துவிட்டார், ஆனால் அவர் மேலும் குணமடைய வேண்டும். எங்கள் குலதெய்வமான ஆஞ்சநேய சுவாமியின் கருணையால் அவர் விரைவில் முழுவதுமாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு மார்க் ஷங்கருக்காக மக்கள் பிரார்த்தனை செய்தார்கள், அவர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக நன்றி என பதிவிட்டு இருக்கிறார்.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
