உலகளவில் பெத்தி திரைப்படம் செய்து வரும் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பெத்தி
இந்திய அளவில் பிரபலமான தென்னிந்திய நட்சத்திரங்களில் ஒருவர் ராம் சரண். இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக அப்படம் வசூலில் சாதனை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும்.

அப்படி மாபெரும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் பெத்தி. இப்படத்தை இயக்குநர் புச்சிபாபு இயக்கினார். இவர் இதற்கு முன் உப்பெண்ணா எனும் படத்தை இயக்கியிருந்தார். இது அவருடைய அறிமுக திரைப்படமாகும்.

ஒரு பக்கம் கண்ணதாசன், மறுபக்கம் பட்டுக்கோட்டை.. நடுவில் புகுந்து ஹிட் கொடுத்த கவிஞர் வாலி.. அது எப்படி தெரியுமா?
மேலும், கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வசூல்
ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான பெத்தி, கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதனால் முதல் நாளுக்கு பிறகு வசூலில் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், 13 நாட்களை கடந்திருக்கும் பெத்தி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ராம் சரணின் பெத்தி திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் ரூ. 350 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu