மீண்டும் சின்னத்திரையில் வலம் வரப்போகும் பெப்சி உமா- எந்த நிகழ்ச்சி, அவரே சொன்ன குட் நியூஸ்
பெப்சி உமா
பெப்சி உமா என்று சொன்னாலே 90களில் இருந்தவர்களுக்கு நிறைய மலரும் நினைவுகள் வந்துவிடும்.
அந்த அளவிற்கு இந்த ஷோ எல்லாம் பெரிய ரீச் பெற்றது, அதைவிட அதில் தொகுப்பாளராக இருந்த பெப்சி உமா அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.
அவருடைய சிரிப்பு, அழகு, குரல், லட்சணமாக புடவை கட்டி அவர் தொகுத்து வழங்கிய ஸ்டைலுக்கு ரசிகர்கள் அப்படி அடிமையாக இருந்தார்கள்.
12ம் வகுப்பு படிக்கும் போதே தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்திருக்கிறார், அதன்பிறகு பொதிகையில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார்.
அதில் இருந்து சன் தொலைக்காட்சிக்கு வந்து பெப்சி உமா என்ற ஷோ மூலம் பெரிய பெயர் பெற்றார். 15 வருடங்கள் பெப்சி உமா ஷோவை நடத்திய உமா 25 வருடங்களாக சின்னத்திரை பக்கமே வரவில்லை.
லேட்டஸ்ட் தகவல்
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெப்சி உமா மேடையில் பேசும்போது, நான் எங்கேயும் போகவில்லை, இங்கு தான் இருக்கிறேன்.
விரைவில் சின்னத்திரையில் சந்திப்போம் என கூற ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆனால் எந்த தொலைக்காட்சி, என்ன ஷோ என்பது தெரியவில்லை.
நடிகர் பாபி சிம்ஹாவின் மகள் மற்றும் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே?- அழகிய குடும்ப போட்டோ

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
