மாமன்னன் படத்தில் உதயநிதி நடிச்சதே தப்பு.. பிரபல இயக்குனர் கோபமான கருத்து
மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படம் ஓடிடியில் வெளியான பிறகு அதனை பற்றிய பேச்சு தற்போது அதிகம் இருக்கிறது. பஹத் பாசில் நடித்த ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டாடும் வகையில் இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படத்தை பற்றிய விவாதங்களும் அதிகம் நடந்து கொண்டிருக்கிறது.
பேரரசு கருத்து
இந்நிலையில் இயக்குனர் பேரரசு தற்போது அளித்து இருக்கும் பேட்டியில் 'உதயநிதி மாமன்னன் படத்தில் நடித்திருக்க கூடாது என கூறி இருக்கிறார்.
மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் பற்றி கமல் முன்னிலையிலேயே பேசுகிறார். அந்த சமூகத்திற்குள் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த படம் என கூறி இருக்கிறார். அதனால் இந்த படத்தில் வில்லனாக காட்டப்பட்டது தேவர் சமூகத்தை சேர்ந்தவர் தான் என்பதை சொல்லிவிட்டார். அவர் அப்படி பேசாமல் இருந்திருந்தால் ரத்னவேல் என்ன ஜாதி என்பதே யாருக்கும் தெரிந்திருக்காது.
"உதயநிதி அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் அவர் என்ன ஜாதி என சொல்லி இருக்கலாம், அவர் அமைச்சராக இருக்கிறார், அவருக்கு எல்லா ஜாதி காரர்களும் ஓட்டு போட்டிருக்கிறார்கள். அவர் இந்த மாதிரி ஜாதி படத்தில் நடித்தது ரொம்ப தப்பு" என அவர் கூறி இருக்கிறார்.
மாமன்னன் பட வெற்றியை தொடர்ந்து மாஸ் இயக்குனருடன் இணையும் வடிவேலு!..அதுவும் ஹீரோவாக!