வாரிசு ரிலீஸ் ஆகலைனா இதுதான் நடக்கும்: இயக்குனர் பேரரசு கோபமான பேட்டி
வாரிசு படத்திற்கு தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனை ஏற்படுத்து வருவது தற்போது பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது.
வாரிசு
பொங்கல் ரிலீஸில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை என TFPC என்ற தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இருக்கிறது. அதனால் டப் ஆகி வெளியாகும் வாரிசு படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது.
இதற்கு சீமான் நேற்று கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். தெலுங்கு படங்களை இங்கே விடமாட்டோம் என அவர் எச்சரித்து இருந்தார்.

பேரரசு பேச்சு
இந்நிலையில் தற்போது இயக்குனர் பேரரசு தற்போது இந்த பிரச்னை பற்றி கடும் கோபத்துடன் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
நாங்கள் எல்லா மொழியையும் ஒன்றாக பார்க்கிறோம், ஆனால் நீங்கள் பிரித்து பார்கிறீர்கள். எங்களை நீங்கள் தூண்டுகிறீர்கள்.
திராவிடர்களாக நாம் அவர்களை சகோதரர்களாக பார்க்கிறோம், ஆனால் அவர்கள் நம்மை தமிழராக மட்டும் தான் பார்கிறார்கள். அதற்கான உதாரணம் தான் வாரிசு படத்தை சங்கராந்தி ரிலீசுக்கு முக்கியத்துவம் தர விடமாட்டோம் என சொல்வது.
இதை சாதாரண விஷயமாக கடந்து செல்ல முடியாது. இது மான பிரச்சனை. வாரிசு ரிலீஸ் ஆகவில்லை என்றால் எந்த பண்டிகைக்கும் தெலுங்கு, கன்னட படங்கள் இங்கே ரிலீஸ் ஆகாத அளவுக்கு பிரச்சனை பெரிதாகும்.
இவ்வாறு இயக்குனர் பேரரசு தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் அப்பாஸுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை பெட்டில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri