குறிப்பிட்ட ஜாதி வெறுப்பு.. வெற்றிமாறனை விமர்சித்த பிரபல இயக்குனர்
சமீபத்தில் நயன்தாராவின் அன்னபூரணி படம் ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்துகிறது என சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து அந்த படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் நீக்கியது.
ஓடிடியில் இருந்து படத்தை நீக்கியது சினிமா துறைக்கு நல்லதல்ல என இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்து இருந்தார். சென்சார் குழுவுக்கு மட்டுமே படத்தை அனுமதிப்பதற்கும், மறுப்பதற்கும் அதிகாரம் இருக்கிறது எனவும் கூறி இருந்தார்.
பேரரசு கருத்து
இந்நிலையில் வெற்றிமாறனை இயக்குனர் பேரரசு விமர்சித்து இருக்கிறார். அவரது குறிப்பிட்ட ஜாதி வெறுப்பு தான் வெளிவந்திருக்கிறது என தாக்கி பேசி இருக்கிறார்.
"வெற்றிமாறனின் கருத்தை வரவேற்கிறேன்! இதே கருத்தை கேரளா ஸ்டோரி படத்தின் போது தெரிவித்திருந்தால் அவரது சினிமா பற்று உறுதியாயிருக்கும். அன்னபூரணிக்கு தெரிவிக்கும்போது அவரின் குறிப்பிட்ட ஜாதி வெறுப்பு தான் வெளிப்படுகிறது. திரைப்பட பற்றாளனாய் இருங்கள் வெற்றிமாறன்!" என பேரரசு பதிவிட்டு இருக்கிறார்.