சர்ச்சையான 'பத்தல பத்தல' பாடல் வரி: கமல் மீது போலிஸில் புகார்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து இருக்கும் விக்ரம் படத்தின் பாடல் 'பத்தல பத்தல' நேற்று வெளியானது. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் பத்தல பத்தல பாடல் இப்போது இணையத்தில் படு வைரல் ஆகி இருக்கிறது.
ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வரும் இந்த பாடல் தற்போது வரை 10 மில்லியன் பார்வைகளை குவித்து இருக்கிறது.
சர்ச்சை ஏற்படுத்திய வரிகள்
'பத்தல பத்தல' பாடலை கமல் தான் வரிகளை எழுதி பாடி இருக்கிறார். "ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்ல இப்பாலே.." என கமல் வெளிப்படையாக மத்திய அரசை விமர்சித்து எழுதி இருக்கும் வரிகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது... தில்லாலங்கடி தில்லாலே.. ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே... சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே
இப்படி மத்திய அரசை திருடன் என விமர்சித்து கமல் வரிகளை எழுதி இருக்கிறார்.

போலீசில் புகார்
இந்த பாடலில் மத்திய அரசை விமர்சித்து இருக்கும் வரிகள் மற்றும் சாதி வன்முறையை தூண்டும் வகையில் இருக்கும் வரிகளை நீக்க வேண்டும் என தற்போது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
நீக்காவிட்டால் படத்திற்க்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் வேண்டும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
