விஜய்யின் லியோ பட வெற்றி விழா கொண்டாட போலீசார் போட்ட கண்டிஷன்கள்- என்னென்ன தெரியுமா?
லியோ படம்
ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் ஏராளமான நடிகர்கள் நடிக்க கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான திரைப்படம் தான் விஜய்யின் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த இரண்டாவது படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தான் வருகிறது.
ஆனால் சில விமர்சனங்கள் கலவையாக தான் வந்துள்ளது, முதல் பாதி சூப்பர், ஆனால் இரண்டாம் பாதி சொல்லும் அளவிற்கு இல்லை என்கின்றனர்.
லோகேஷ் கனகராஜும் லியோ விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் படம் 11 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 450 கோடி மேல் வசூல் சாதனை செய்து வருகிறது.

வெற்றி விழா
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை படக்குழு பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்ய கடைசியில் ரத்தானது. இந்த நிலையில் தான் லியோ படக்குழு வெற்றிவிழாவை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்கள்.
நிகழ்ச்சிக்காக போலீஸ் அனுமதி வாங்க சென்னை காவல் நிலையத்தில் கடிதமும் கொடுத்துள்ளார்கள்.
தற்போது நிகழ்ச்சிக்கு காவல்துறை சில கண்டிஷன்களுடன் அனுமதி கொடுத்துள்ளனர். அது என்னென்ன என்பதை காண்போம்.
நேரு விளையாட்டு அரங்கில் நவம்பர் 1ம் தேதி நடைபெற இருக்கும் விஜய்யின் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளனர்.
200-300 கார்களுக்கு மட்டும் அனுமதி, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேருந்தில் வர அனுமதி இல்லை.
அனுமதித்த எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
நேரு விளையாட்டு அரங்கிலுள்ள இருக்கைகளுக்கு ஏற்றவாறு ரசிகர்களை அனுமதிக்க வேண்டும்.
லியோ வெற்றி விழாவை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.