கட்டுக்கடங்காத மகேஷ் பாபுவின் ரசிகர்கள், போலீசாருக்கு கால் முறிவு.. பதறவைக்கும் வீடியோ காட்சி இதோ
மகேஷ் பாபு
இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'குண்டுர் காரம்'. இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
படுகாயம்
சமீபத்தில் குண்டுர் காரம் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மகேஷ் பாபு ரசிகர்கள் அதிமாக திரண்டனர். அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் முயன்றனர். ஆனால் ரசிகர்கள் நாற்காலிகளை தூக்கி வீசி ஒருவருக்கொருவர் சண்டை போட்டு கொண்டனர்.
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடியடி நடத்தினார்கள். அந்த சமயத்தில் கூட்ட நெரிசலில் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கட ராவின் கால் முறிந்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
