ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்!! இயக்குனர் நெல்சன் கொடுத்த விளக்கம்!!
ஆம்ஸ்ட்ராங்
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சம்பந்தட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் தலைமறைவாகிய ரவுடி சம்போ செந்தில் உள்ளிட்டவர்களை போலிசார் தேடி வருகிறார்கள்.
விசாரணை
ரவுடி சம்போவின் நண்பரான மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குனரின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்ததாகவும், அவருடைய வங்கி கணக்குக்கு ரூ. 75 லட்சம் பண பரிவத்தனை செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தது. இதற்கு மோனிஷா தரப்பில் இருந்து 'இது முற்றிலும் பொய்யான தகவல்’ என விளக்கம் அளித்து இருந்தார்.
தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சனிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி நிலையில், ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக என்னிடமும் என் மனைவியிடமும் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை. மேலும் காவல்துறை சார்பில் சம்மன் ஏதும் எனக்கு அனுப்பப்படவில்லை என்று நெல்சன் தெரிவித்துள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
