டப்பிங் சீரியலா... வாங்கோ வாங்கோ.... தனி வழியில் பயணிக்கும் பாலிமர் டிவி
சன்-விஜய் இரண்டு தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டு சீரியல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு வருகிறார்கள்.
ஒரு தொடர் அந்த நேரத்தில் ரீச் ஆகவில்லையா அப்போது நேரத்தை மாற்று என இரண்டு தொலைக்காட்சியும் போட்டிபோட்டு TRPகாக வேலை பார்க்கிறார்கள்.
ஆனால் பாலிமர் தொலைக்காட்சியின் ரேஞ் வேறு, அவர்கள் வழியே தனி வழி தான். புதிதாக தொடங்கப்படும் சீரியல்கள் இதில் வரும் தான் ஆனால் ஹிந்தியில் இருந்து டப் செய்யப்பட்ட சீரியல்கள் தான் இதில் ஒளிபரப்பாகும்.
இதற்கு முன்பு ஏன் கடந்த வருடம் கூட பாலிமர் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பானது.
இப்போது எங்கள் சாய் மற்றும் உள்ளம் கொள்ளை போகுதடா என்ற தொடர்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது.
எங்கள் சாய்
இது ஒரு தெய்வீக தொடர், சாய் பாபாவின் அருமைகளை எடுத்துரைக்கும் ஒரு சீரியல். இது ஹிந்தி தொடர் டப்பிங் தான்.
உள்ளம் கொள்ளை போகுதடா
Bade Achhe Lagte Hain தொடரின் டப்பிங் தொடர் தான் உள்ளம் கொள்ளை போகுதடா தொடர். கணவன்-மனைவியாக இருந்தாலும் காதலை வெளிப்படுத்த தவிக்கும் ஒரு ஜோடி.
இவர்களை பணத்திற்காக பிரிக்க நினைப்பவர்கள் ஒரு பக்கம், நல்ல ஜோடியான இவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என அவர்களுக்கு உதவுபவர்கள் இன்னொரு பக்கம். இந்த தொடர் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
எக்கச்சக்க டப்பிங் தொடங்களை ஒளிபரப்பி வந்த பாலிமர் இன்னும் நிறைய தொடர்களை ஒளிபரப்ப முன்வரலாம் என்பது ரசிகர்களின் ஒரு எண்ணமாக உள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷின் முதல் தொடர் என்ன தெரியுமா?- கோபியின் வேற லுக் புகைப்படம்