தாறுமாறாக வசூல் வேட்டை நடத்தும் பொன்னியின் செல்வன்- போட்ட பணத்தை எடுத்துவிட்டார்களா?
பொன்னியின் செல்வன்
கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் என்ற நாவலை எப்படி தான் எழுதினார் என வியப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதையே ஒரு படமாக இயக்கியுள்ள மணிரத்னத்தை பார்த்து அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
முதல் பாகத்தை வெற்றிகரமாக இயக்கி வெளியிட்டு சாதனை செய்துவிட்டார். மொத்தம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் போட்ட பணத்தை விரைவில் எடுத்துவிடும் என தெரிகிறது.
முழு வசூல்
படம் ரிலீஸ் ஆன நாள் எவ்வளவு வசூலித்தது என்று தயாரிப்பு நிறுவனமே அறிவித்தார்கள். முதல் நாளில் ரூ. 80 கோடி வரை வசூலித்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூல் வேட்டை தான் நடத்துகிறது.
நேற்று படம் ரூ. 400 கோடி வரை வசூலித்துவிட்டதாக லைகா ஒரு வீடியோ வெளியிட்டார்கள். படம் ரிலீஸ் ஆகி 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 430 கோடி வரை வசூலித்துவிட்டதாம்.
விரைவில் ரூ. 500 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.
பிக்பாஸ் மகேஷ்வரியின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்