பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் ரெடி.. ஆனால்

Report

பொன்னியின் செல்வன்

மணி ரத்னம் இயக்கத்தில் உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிடப்பட்டு, முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்தது.

விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெயராம் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் ரெடி.. ஆனால் | Ponniyin Selvan 2 Trailer

இதற்கான ப்ரோமோஷன் பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என தெரிவித்துள்ளனர். அதன் முதற்கட்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. எங்கு, எப்போது நடைபெறும் என்பதை படக்குழுவே அறிவிப்பார்கள்.

ஏற்கனவே பொன்னியின் செல்வன 2வில் இருந்து வெளிவந்த 'அக நக' பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து மீதமுள்ள இரு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 

இந்நிலையில், ரசிகர்களுக்கு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரைலர் தயாராகிவிட்டதாம். 3.24 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த ட்ரைலர் இசை வெளியீட்டு விழாவில் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் ரெடி.. ஆனால் | Ponniyin Selvan 2 Trailer

ட்ரைலரின் நீளம் 3.24 நிமிடங்கள் என்பதால் ரசிகர்கள் 'சற்று பெருசாக உள்ளதே' என கூறி வருகிறார்கள். ஆனால், பொன்னியின் செல்வன் 1 படத்தின் ட்ரைலர் கூட அதே நீளம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலை அட்ஜஸ்ட் பண்ணா கூட ஜூம் பண்றாங்க.. நடிகை வாணி போஜன் பேட்டி 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US