பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு.. ஆதித்த கரிகாலன் முதல் மணிமேகலை வரை
பொன்னியின் செல்வன்
கல்கியின் கரங்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகளுக்கு பின் தற்போது மணி ரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். 40ஆண்டு கனவு, 15 ஆண்டு விட முயற்சி, 4 ஆண்டுகள் கடுமையான சவால்கள் என அனைத்தையும் எதிர்கொண்டு இப்படத்தை இயக்கியுள்ள மணி ரத்னம்.
சில நாட்களுக்கு இப்படத்தின் டிக்கெட் புக்கிங் உலகம் முழுவதும் துவங்கியது. தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் காணாத அளவிற்கு பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் புக்கிங் நடந்துள்ளது என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அதற்க்கு முக்கிய காரணமே பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்கள் தான்.
ஆம், ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன், வல்லவராயன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை என தங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களை திரையில் காண ரசிகர்கள் வெறித்தனமாக ஆர்வம் தான் இந்த மாபெரும் டிக்கெட் புக்கிங்கிற்கு காரணமாக அமைந்துள்ளது. அப்பேற்பட்ட பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்கள் குறித்து நாம் பார்க்கவிற்கும் தொகுப்பு தான் இந்த பதிவு..
ஆதித்த கரிகாலன்
- சோழ தேசத்தின் முடிக்குரிய இளவரசன்
- சுந்தர சோழரின் மூத்த மகன்
- தனது 12ஆம் வயதிலேயே போர் புரிந்தார்
- இராஷ்டிரகூடர்களை விரட்டி காஞ்சியில் சோழக்கொடியை நாட்டியவர்
- தனது பெற்றோர்களுகாக காஞ்சியில் பொன்மாளிகை கட்டி அழகு பார்த்தவர்
- வீரபாண்டியனின் தலையை கொண்ட கோப்பரகேசரி
- நந்தினியுடனான காதல் தோல்வியால் வெறிபிடித்து போரிட்டார்
- வீரத்தின் அடையாலம், ஈடு இணையற்ற மாவீரன்
வல்லவரையன் வந்தியத்தேவன்
- கதையின் நாயகன்
- அதித்த கரிகாலரின் நண்பன்
- வாணர் குளத்தை சேர்ந்தவன்
- சாமர்த்தியசாலி
- சிறந்த போர்வீரன்
- ஆதித்த கரிகாலரின் ஒற்றனாகாவும் பணியாற்றுவர்
- பெண்களிடம் மனதை பறிகொடுக்கும் மன்மதன்
- குந்தவையின் மனம் கவர்ந்த மனாலன்
பொன்னியின் செல்வன் - அருண்மொழி வர்மன்
- சுந்தர சோழரின் இளைய மகன்
- பொன்னியின் செல்வன் எனும் பெயருக்கு சொந்தக்காரர்
- சோழ தேசத்து மக்களின் செல்லபிள்ளை
- யானைகளை கையாளுவதில் சிறந்தவர்
- அக்கா குந்தவையின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பவர்
- கலை, இலக்கியன், கட்டடக்கலை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்
- சோழ மக்களுகாக இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர்
- சிறந்த போர்வீரன்
- பிற்கால வரலாற்றில் ராஜா ராஜா சோழனாக அறியப்பட்டவர்
நந்தினி
- அர்ச்சகர் வீட்டில் வளர்ந்தவள்
- இவளுடைய அழகுக்கு மயங்காத ஆண்களே இல்லை
- சோழர்களுக்கு எதிரான சதிகள் அனைத்துக்கும் மூளையாக செயர்படுபவள்
- பெரிய பழுவேட்டரையரின் மனைவி
- ஆதித்த கரிகாலரின் முன்னாள் காதலி
- சூழ்நிலையால் வஞ்சிக்கப்பட்டவள்
- மந்தாகினியின் மகள் என கூறப்படுபவள்
குந்தவை
- சுந்தர சோழரின் மகள்
- அரசியல் ஞானம் மிகுந்தவர் சோழர்களின்
- அரச குடும்பத்திலேயே புத்திகூர்மை மிக்கவர்
- சிற்றரசர்கள் முதல் பேரரசர்கள் வரை அனைவரும் இவர்மீது அதீத மரியாதை கொண்டுள்ளார்கள்
- பேரழகி
- இராஜ இராஜ சோழன் ஆண்ட காலத்தில் அவருக்கு அரசுபுரிய சிறந்த ஆலோசனைகளை வழங்கியவர்
- மக்களுக்காக பல இலவச மருத்துவமனைகளை கட்டினார்
- வந்தியத்தேவனை மனந்தவர்
ஆழ்வார்க்கடியான் நம்பி
- இவர் இயர்பெயர் திருமலை
- சோழதேசத்து முதன் மந்திரியான அநிருந்தரின் சீடர்
- திறமையான உளவாளி
- தீவிர விஷ்ணு பக்தர்
- சிவபக்தர்களுடன் வம்பிழுப்பார்
- வந்தியத்தேவனை பின் தொடருபவர்
- நந்தியின் அண்ணன்
- சாமர்த்தியசாலி
பூங்குழலி
- கோடிக்கரையை சேர்ந்தவள்
- கலங்கரை விளக்க காவலர் தியாகவிடங்கரின் மகள்
- சமுத்திரகுமாரி என்ற பட்டப்பெயருக்கு சொந்தகாரி
- படகு வலிப்பதில் மிகுந்த திறமைசாலி
- தனிமை விரும்பி
- உடல் வலிமையும் மன வலிமையும் கொண்டவள்
- புத்திசாளி
- எவருக்கும் அடிபணியாதவள்
- அருண்மொழி வர்மன் மீது ஒருதலை காதல் கொண்டவள்
பெரிய பழுவேட்டரையர்
- பழுவர் சிற்றரசை ஆள்பவர்
- சோழ அரசின் தானதிகாரி
- போரில் 64 விழுப்புணகள் பெற்றவர்
- முதியவர் என்றாலும் உடற்பலத்தில் வீரர்
- முதியவர் பழுவேட்டரைவரான இவர் நந்தினியை மணந்து மாயவலையில் சிக்கினார்
சின்ன பழுவேட்டரையர்
- பெரிய பழுவேட்டரையரின் தம்பி
- தஞ்சை கோட்டையின் காவலர்
- கண்டிப்பு மிக்கவர்
- மதுராந்தகனின் மாமனார்
- நந்தினியை வெறுப்பவர்
- சோழ தேசத்தின் மீது மீகுந்த பற்று கொண்டவர்
மனிமேகலை
- சிற்றரசர் செங்கண்ணர் சம்புவரையரின் மகள்
- வந்தியத்தேவனை நேசித்தாள்
- நந்தினியை நம்பி ஏமார்ந்தவள்
- கந்தன்மாறனின் தங்கை
- வந்தியத்தேவனை பல முறை காப்பாற்றியவள்
- கதையின் இருதியில் வந்தியத்தேவன் மடியில் உயிர் பிரிந்தாள்
- தியாக சிகரம் ஆனவள்