அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முக்கிய அப்டேட்.. இதோ
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஜெயராம் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது. இதை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
முக்கிய அப்டேட்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள்.
வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இப்படத்தில் மொத்தம் 3 பாடல்கள் என்றும் கூடுதலாக தெரியவந்துள்ளது.
இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து படத்தில் நடித்துள்ள முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் ப்ரோமோஷனுக்காக உலகளவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள் கூறப்படுகிறது.
துணிவு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.. தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா