முதல்முறையாக தமிழகத்தில் பொன்னியின் செல்வன் செய்த சாதனை! இந்த ஒரு திரைப்படமும் நிகழ்த்தியது இல்லை
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பொன்னியின் செல்வன் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பேராதரவை பெற்று பிரம்மாண்ட வசூலை குவித்தது.
அதன்படி உலகளவில் இப்படம் ரூ. 450 கோடிக்கும் வசூலை குவித்திருக்கிறது. மேலும் வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் ரூ. 500 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் 4-வது வாரத்திலும் திரையரங்கில் நல்ல வரவேற்புடன் ஒடிக்கொண்டு இருக்கிறது.
மேலும் தமிழகத்தில் முதல்முறையாக ரூ.100 கோடி ஷேர் எடுத்த திரைப்படமும் பொன்னியின் செல்வன் தான் என்ற சாதனையை படைத்திருக்கிறது. வேறு எந்த ஒரு திரைப்படமும் இப்படியான சாதனையை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜி.பி.முத்து