ரிலீஸுக்கு முன்பே பொன்னியின் செல்வன் படத்தின் உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம் !
பொன்னியின் செல்வன்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட வரலாற்று திரைப்படமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது..
சமீபத்தில் கூட இப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து போஸ்டர்களை வெளியிட்டு இருந்தனர். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என அனைத்து போஸ்டர்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

எதிர்பார்ப்பில் PS-1
மேலும் அந்த போஸ்டர்களை வெளியிட்டது மட்டுமின்றி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான PS -1 வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்து இருந்தனர்.
இப்படத்தின் போஸ்டர்கள் மட்டும் வெளியாகியுள்ள நிலையில் PS -1 படத்தின் OTT உரிமத்தை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RRR திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது, தெரியுமா?