பொன்னியின் செல்வன் படத்தை கைப்பற்றிய சன் டிவி.. அதுவும் இத்தனை கோடிகளுக்கா
பொன்னியின் செல்வன்
கல்கியின் எழுதியில் உருவான பொன்னியின் செல்வன் நாவலை படமாக, பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பிரபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
அண்மையில் கூட இப்படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.
வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூ. 25 கோடிக்கு சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதே போல் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 100 கோடி அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.