தமிழகத்தில் பொன்னியின் செல்வன் படம் செய்த வசூல் சாதனை- விஸ்வாசம், பாகுபலி 2 பட வசூலை முறியடித்ததா?
பொன்னியின் செல்வன்
தமிழ் மொழியில் கல்கி என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டு ஒட்டுமொத்த மக்களால் ரசிக்கப்பட்ட ஒரு நாவல் பொன்னியின் செல்வன். இந்த கதையை நிறைய பேர் எடுக்க ஆசைப்பட மணிரத்னத்தினால் அது சாத்தியம் ஆனது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி இப்படத்தின் முதல் பாகம் வெளியானது. படத்தை கண்ட அனைவருமே புத்தகத்தில் படித்ததை திரையில் பார்க்க சந்தோஷமாக இருப்பதாக கூறி வந்தனர்.
படமும் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.

தமிழகத்தின் வசூல்
இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 400 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது. தமிழ்கத்தில் பாகுபலி, விஸ்வாசம் பட வசூல் சாதனையை முறியடித்து இப்போது ரூ. 168 கோடி வசூலித்து 2ம் இடத்தில் உள்ளது.
ரூ. 190 கோடி வசூலித்து முதல் இடத்தில் இருக்கும் விக்ரம் திரைப்பட வசூல் சாதனையை இப்படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இலங்கை பெண் ஜனனிக்கு பிக்பாஸ் முன்பே இப்படியொரு வரவேற்பா?- ரசிகர்கள் செய்ததை பாருங்கள்